Friday, 28 March 2014

அன்பிற்குரிய தமிழ்நாடு கோட்ட மற்றும் கிளை செயலாளர்கள் கவனத்திற்கு.

     வணக்கம் வருகிற ஏப்ரல் 30 தேதிக்குள்ளாக எப்போதும் போல இந்தவருடமும் புதிய உறுப்பினர் சேர்க்கலாம்.
புதிய உறுப்பினர் சேர்க்க இன்னும் 30 தினங்கள் மட்டுமே உள்ளன என்பதை மறந்து விட வேண்டாம். தற்போது மாநில மட்டத்தில் நிலவும் அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு தயவு செய்து அமைதியாக இருந்து விட வேண்டாம். உடனடியாக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு தயாராவீர். அதற்கான பணியினை இன்றே மேற்கொள்ளவும். நமது அனைத்து உறுப்பினர்களையும் இந்த பணியில் ஈடுபடுத்தவும். உங்கள் நண்பர்கள் உடன் பணிபுரியும் சக உறுப்பினர்களிடமும் படிவங்களை பெற்று அனைத்து படிவங்களையும் ஒரே கடிதத்தில் குறிப்பிட்டு அதை 4 அல்லது 5 பிரதிகள் எடுத்து கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 30.04.2014 அன்று மாலை 0500 மணிக்கு முன்பாக ஒப்படைக்கவும். மேலும் கோட்ட அலுவலகத்தில் அதை ஒப்படைத்ததற்கு அத்தாட்சியாக ஒரு பிரதியில் ஒப்புதலை பெற்று வாங்கிகொள்ளவும்.  
உறுப்பினர் படிவம் கையெழுத்து பிரதியாகவோ அச்சு பிரதியாகவோ இருக்கலாம் அதற்கு எந்த விதிமுறையும் கிடையாது. 
மேலும் விவரங்களுக்கு எப்பொழுதும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். 
நன்றி. 
தோழமையுடன் 
N.J. உதயகுமாரன் 
தமிழ் மாநில செயலாளர்

No comments:

Post a Comment