அன்பார்ந்த தேசிய தோழர்களே
வணக்கம் கடந்த பெப்ரவரி 25,26 மற்றும் 27 அன்று காஞ்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் நடந்தேறிய ஜனநாயக படுகொலையும் அதை நிகழ்த்தி காட்டிய விதமும் நீங்கள் அறிந்து கொள்ள இதோ.............
நகரேசு காஞ்சியில் நடந்தது என்ன அறிந்து கொள்ளுங்கள் தோழர்களே !
பெப்ரவரி 28 அன்று நமது மு.மா. திரு.G.P.முத்துகிருஷ்ணன் அவர்கள் பணி ஓய்வு பெற போவதால் புதிய செயலாளராக யார் வர போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு உறுப்பினரிடமும் இருந்தது தெரிந்ததே. இந்நிலையில் கடந்த 05.01.2014 அன்று திருநெல்வேலி வெள்ளி விழா மாநாட்டில் கலந்து கொண்ட மு.மா. திரு.G.P.முத்துகிருஷ்ணன் அவர்கள் தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு உதயகுமாரன் அவர்களிடம் மாநில செயலாளராக பணியாற்ற அவரின் விருப்பத்தை அறிய விரும்பிய போது அவரும் அன்றே இசைவும் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் பெப்ரவரி 25,26 மற்றும் 27 அன்று காஞ்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு உதயகுமாரன் அவர்கள் மாநில செயலராக தன்னை முன்னிறுத்தி ஆதரவு கேட்ட போது மு.மா. திரு.G.P.முத்துகிருஷ்ணன் அவர்கள் தென் சென்னை கோட்ட செயலாளர் ஜனாப் சுல்தான் அவர்களை முன்னிறுத்தினார். அவரே அனைவரிடமும் ஆதரவும் கோரினார்.
நமது மாநில செயலாளர் திரு.N.J.உதய குமாரன் அவர்களுக்கு தமிழகத்தில் மொத்தமுள்ள 52 கிளை மற்றும் கோட்டங்களில் 35 க்கு மேற்பட்ட கோட்ட செயலர்கள் ஆதரவு தெரிவித்தனர் என்பதற்காக அமைப்பு நிலை விவாதத்தையும் பொருளாய்வு கூட்டத்தையும் கடைசி வரை காலம் தாழ்த்தி இழுத்தடித்தது மட்டுமல்லாமல் முறையாக நடத்தி அனைவரின் கருத்தையும் மு.மா அவர்கள் அறிய முற்படாதது துரதிஸ்டம் மட்டுமல்ல ஜனநாயக படுகொலையாகும்.
பல்வேறு கோட்ட செயலர்கள்/ மாநில செயற்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பை காட்ட, தனக்கு வேறு வழியின்றி நயவஞ்சகமாக பின்வாங்குவதாக அறிவித்தார்கள். ஆனாலும் திரு.N.J.உதய குமாரன்அவர்களை மாநில செயலாளராக ஏற்க மனமின்றி தானெடுத்த மூப்பாக மூன்றாம் நாள் காலையில் ஜனாப் அப்துல் காதிர் அவர்களை (ஓய்வுக்கு 5 மாதக்காலமே உள்ள அவரை) முன்னிறுத்தினார். இதுவும் தன்னை போல புறவாசல்வாசத்திற்கு ஒருவரை தயார்படுத்தும் விதமான திட்டத்தின் ஒரு பகுதி என எல்லோரும் எண்ணினர். தனது எண்ணம் ஈடேற சார்பாளர்கள் எண்ணிக்கையில் குளறுபடிகளை ஏற்படுத்தினார். சில கோட்ட செயலர்களை பதவி தருவதாக கூறி தன்பக்கம் இழுக்க நினைத்தார். இரண்டொரு நாளில் ஓய்வு பெறபோகும் மு மா அவர்கள் தனக்கு இருந்த மரியாதையை அவரே போக்கியும் கொண்டார்.
இந்த யுத்தம் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் ஆன யுத்தம் ஆனது.
இந்நிலையில் தான் தேசிய சங்கத்தின் மீது பற்றும் பாசமும் கொண்ட தலைவர் KR அவர்களின் உண்மை விசுவாசிகள் சுய விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டு இயக்க நலனை முன்னிறுத்தி சில முடிவுகளை எடுத்தனர்.
இயக்க நலனை முன்னிறுத்தி மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக தூது சென்ற 'கார்மேகவர்ணன்' கண்ணன் கூட துரியோதன கூட்டத்தோடு ஐந்து அரசு வேண்டும், இல்லையேல் ஐந்து ஊர் வேண்டும், இல்லையேல் ஐந்து காணி வேண்டும் என்றான். ஆனால் இயக்க நலனுக்காக நம் கண்ணனாய் தூது சென்ற திருநெல்வேலி கோட்ட செயலர் திரு இராம சுப்பிரமணியன் அவர்கள் ஒட்டுமொத்த அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக எண்ணிக்கை அடிப்படையில் சமரசம் மேற்கொள்ளாமல் நம் எண்ணம் ஈடேற இயக்க நலனை மட்டுமே முன்னிறுத்தி "போட்டி நமக்கு நல்லதன்று" என உரைத்து சமரசம் மேற்கொண்டார். அதை ஏற்று மாநில செயலராக திரு உதய குமாரன் அவர்களை தேர்ந்தெடுப்பது என்றும் மற்ற பொறுப்புகளுக்கு அனைத்து தரப்பிலும் ஒருங்கிணைத்து தேர்ந்தெடுப்பது என முடிவெடுத்து உடனடியாக மாநில செயற்குழுவும் கூடிட மு.மா திரு.G.P.முத்துகிருஷ்ணன் அவர்கள் அழைப்பு விடுத்தார். அந்த செயற்குழுவும் அதே முடிவை ஏகமனதாக மேற்கொண்டது.
பின்பு வழக்கம் போல காலதாமதமாக தொடங்கிய பொருளாய்வு கூட்டத்தில் கடைசியாக மு.மா அவர்கள் தனது பதிலுரை கூட அளிக்காமல் ஏற்கனவே ஒப்புக்கொண்டு அறிவிக்கபட்ட நிர்வாகிகளுக்கு மாற்றாக அவசர அவசரமாக தேர்தல் நடத்த முற்பட்டது துரோகத்தின் உச்சம். இந்நிலையில் நாம் மேடையிலே நமது எதிர்ப்பை தெரிவித்து திருநெல்வேலி கோட்ட செயலர் திரு இராம சுப்பிரமணியன் அவர்கள் முன்மொழிய தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு உதயகுமாரன் அவர்கள் வழிமொழிய
திருமதி விஜயலட்சுமி Asst Manager, PSD Trichy அவர்களை மாநில தலைவராக அனைத்து பிரதிநிதிகளும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.
பின்பு அவரின் தலைமையில் அனைத்து மாநில நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர். பின்பு இலாகா பிரதிநிதியிடம் நமது எதிர்ப்பை பதிவு செய்து பட்டியலை சமர்பித்தோம், என்பதே உண்மை .
குருசேத்திரத்தின் இறுதி வெற்றி தர்மத்தின் பக்கம் என்பதை நினைவில் கொள்வோம். இருந்த போதிலும் நமது கவலை எல்லாம் நமது பதவிகளில் இல்லை இயக்க நலனில்தான் இருக்கிறது.
காலம் வரும்............. நாளை நமதென காத்திருப்போம்

சோதனைகளை வெல்வோம் சாதனைகளாக மாற்றுவோம்
உங்களின் ஒத்துழைப்பை இன்று போல் என்றும் எதிர்நோக்கி........
மாநில நிர்வாகிகள்
தமிழ் மாநிலம்
No comments:
Post a Comment