Saturday, 19 April 2014

தமிழ் மாநில இடைகால குழு நியமனம். CPMG அங்கீகாரம்

அன்பார்ந்த தோழர்களே 
             வணக்கம்  
             கடந்த 27.02.2014 அன்று நடைபெற்ற காஞ்சிபுரம் 25வது தமிழ் மாநில மாநாட்டின் அசாதாரண சூழ்நிலையில் தேர்ந்தெடுக்கபட்ட நம்மையும் போட்டியாக அறிவிக்கபட்ட  மற்றொரு நிர்வாகிகள் பட்டியலையும் நமது அகில இந்திய சங்கம் அங்கீகரிக்க மறுத்ததோடு தங்களது கடித எண் 17-1/CC   நாள் 01.04.2014 ன் படி அவர்கள் நமது Tamilnadu CPMG அவர்களிடம்
திரு.P. திருஞான சம்பந்தம், தலைவர் தூத்துக்குடி கோட்டம்  அவர்களை Convenor ஆகவும் Member களாக
1. திரு. K. மோகன்ராவ் கோட்ட செயலாளர் கிருஷ்ணகிரி
2.  திரு.K. ஸ்ரீனிவாசன் Organizing Secretary, திருச்சி
3. திரு.J. குணசேகரன் Executive Member, திருநெல்வேலி ஆகியோர்களை
இடைகால குழுவிற்கு (Ad-hoc Committee) நியமித்து கடிதம் கொடுத்தது. அதனை ஏற்று நமது Tamilnadu CPMG அவர்களும் இந்த இடைகால குழுவிற்கு(Ad-hoc Committee) முறைப்படியான அங்கீகாரம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இனிமேல் இந்த இடைகால குழு புதிய நிர்வாகி தேர்தலை 90 நாட்களுக்குள் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க முயற்சி மேற்கொள்ளும்.
               எனது (N.J.உதயகுமாரன்) தலைமையிலான நிர்வாகிகள் பட்டியலை நமது அகில இந்திய சங்கம் அங்கீகரிக்கவில்லை என்ற மனக்குறை நமக்கு இருப்பினும் அகில இந்திய சங்க முடிவினை முழு மனதோடு ஏற்று இந்த இடைகால குழுவிற்கு (Ad-hoc Committee) நாம்  ஜனநாயக முறையில் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவது என்று தீர்மானித்துள்ளோம்.
              அதுபோல தலைவர் KR உருவாக்கிய இந்த சங்கத்தின் நலனை கருத்தில் கொண்டு தலைவர் KR வகுத்த வழியில் பீடுநடை பயில கோட்ட நிர்வாகிகள் அனைவரும் அதே  ஒத்துழைப்பை நல்கிட அன்புடன் வேண்டுகிறோம்.

என்றும் தொழிற்சங்க பணியில்
உங்களின் பேராதரவோடு....
N.J.உதயகுமாரன்.

No comments:

Post a Comment