அன்பு தோழர்களே
வணக்கம் பதவி பறிபோனவுடன் சிலர் மற்றவர்களை அவமதிப்பதையே தொழிலாக கொண்டு செயல்பட்டு வந்ததை நீங்கள் அறிவீர்கள். அதில் ஒரு பகுதியாக கடந்த 22.04.14 அன்று தாம்பரம் கோட்ட செயலர் திரு.J.மனோகரன் அவர்களும் தென்சென்னை கோட்ட செயலாளர் திரு K.சுல்தான் அவர்களும் சுற்றறிக்கையை வெளியிட்டு நமது தேனீ கோட்ட செயலாளர் திரு ராஜேந்திரன் அவர்களையும், திருநெல்வேலி கோட்டசெயலாளர் திரு.S.A.இராம சுப்பிரமணியன் அவர்களையும் அவமதித்து இருந்தனர். தனது மதிப்புக்கும் மரியாதைக்கும் ஏற்பட்ட அவமரியதையால் திரு.S.A.இராமசுப்பிரமணியன் அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்
அதற்கு திருநெல்வேலி கோட்டசெயலாளர் அவர்கள் தனது வழக்கறிஞர் மூலம் தாகீது அனுப்பினார். திரு.K.சுல்தான் அவர்கள் வழக்கறிஞருக்கு தனது 19.06.2014 தேதியிட்ட பதிலில் தான் திரு.S.A.இராமசுப்பிரமணியன் அவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை என்றும் இது வழக்கமான தொழிற்சங்க விமர்சனம் என்று மீண்டும் மீண்டும் கூறி தனது செயலை நியாயப்படுத்துகிறார். தனது தவறை உணர்ந்து அதை திருத்தி கொள்ள முயலவில்லை. மேலும் திரு.S.A.இராமசுப்பிரமணியன் அவர்களின் மாண்பை, மரியாதையை குறைக்கும் முயற்சியை நிறுத்திக்கொள்ளவும் இல்லை. தொடர்ந்து பல்வேறு கோட்ட செயலர்களிடம் அலைபேசி வாயிலாக ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகிவிடும் என்ற முறையில் கூறிவருகிறார்கள். திருநெல்வேலி கோட்ட முன்னாள் தலைவர்
திரு.E.ஆனந்தராஜ் அவர்களுக்கு ஏதோ மாநில பதவி கேட்டதாக கூறி
கடந்த 41 ஆண்டுகாலமாக (இவர்களை போல அல்ல) தேசிய சங்கத்தின் உறுப்பினராகவும் இலாகாவிலும் கண்ணியத்துக்குரிய முறையில் பணியாற்றிய அவரையும் இவர்களை போல பதவி சுகம் தேடி அலைபவராக பாவித்து அவமரியாதை செய்து வருகிறார்கள். அதற்காக வேறு வழியின்றி முன்னாள் தலைவர் திரு.E.ஆனந்தராஜ் அவர்களின் ஆலோசனையின் பேரில் திருநெல்வேலி கோட்ட உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருநெல்வேலி கோட்டசெயலர் திரு.S.A.இராமசுப்பிரமணியன் அவர்கள் திருநெல்வேலி உரிமையியல் நீதி மன்றத்தில் மான நஷ்ட வழக்கு ஒன்றை அவமதிப்புக்காக பதிவு செய்ய முடிவு செய்துள்ளார்கள். அந்த வழக்கு விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்க படுகிறது.
தகவல் : திருநெல்வேலி கோட்ட செயலர் திருS.A.இராமசுப்பிரமணியன் அவர்கள்.

No comments:
Post a Comment