Wednesday, 4 June 2014

திருநெல்வேலி தேசிய சங்க கோட்ட தலைவர் திரு.E.ஆனந்தராஜ் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா திருநெல்வேலி

                       திருநெல்வேலி தேசிய  சங்க கோட்ட தலைவர் திரு.E.ஆனந்தராஜ் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா திருநெல்வேலி தெற்கு புறவழி சாலை விஜயா கார்டனில் வைத்து 31.05.2014 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சி Sr Postmaster (Rtd) திரு. P. பேச்சி முத்து அவர்கள் தலைமையில்  தேசிய  சங்க முன்னால் மாநில உதவி செயலாளரும் 
கலங்கரை விளக்கு மாத இதழ் ஆசிரியருமான திரு.M.மாலிக்,  
முதுநிலை கண்காணிப்பாளர் (ஓய்வு)  திரு.M.S.G.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை நடைபெற்றது.  

நமது கோட்ட செயலாளர் திரு.S.A.இராமசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் அதனை தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்தும்  வழங்கினார். நமது கோட்ட சங்கத்தின் சார்பாக மூத்த தோழர் 
திரு.P. சுப்பிரமணியன் அவர்கள் பொன்னாடை அனுவிக்க  நமது செயலாளர் அவர்களால் வாழ்த்துமடல் வசித்து அளிக்கபட்டு கவ்ரவிக்கபட்டார்.
பலர் வாழ்த்துரை வழங்கினர்.  

தமிழ் மாநில தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பாக தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு.N.J.உதய குமாரன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

திரு ஐயன்கன்னு அவர்கள் நன்றி நவில, கூட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment