Wednesday, 9 July 2014

தடைகள் தகர்ந்தன. நீதியின் முன்னால்.

அன்பு தோழர்களே
வணக்கம் சில தினங்களாக நமது முன்னாள் மாநில செயலர்
நமது மாநில சங்கத்தை முடக்க ஒரு சிலரை தூண்டிவிட்டு அவர்களின் பின்னால் இருந்து தொடர்முயற்சி எடுத்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக மாநில நிர்வாகம் மற்றும் மாநில சங்கத்துக்கு எதிராகவும் தடையானை பெற்று விட்டதாகவும் இதன்மூலம் இடைக்கால குழுவை செயலிழக்க செய்துவிட்டதாகவும் பல்வேறு தரப்பு கோட்ட மற்றும் கிளை செயலர்களை தொடர்பு கொண்டு தெரிவித்த தோடு மட்டுமல்லாமல் தனது எடுபிடிகளை வைத்து கடிதம் மூலம் தொடர்ந்து நமது சங்கத்தை முடக்க நினைத்தார்.  தற்போது நீதீதேவதையின் முன்னால் அத்தடைகள் தகர்க்கப்பட்டு நமது இடைக்கால குழு தொடர்ந்து செயலாற்ற உத்தரவு வழங்கபட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து கொள்கிறோம்.

No comments:

Post a Comment