Monday, 12 January 2015

பிலாயை (Bhillai) நோக்கி............

வணக்கம்
           அன்பு தேசிய நெஞ்சங்களே. நமது அகில இந்திய மாநாடு வருகிற ஜனவரி திங்கள் 20,21 மற்றும் 22 தேதிகளில் சட்டிஸ்கர் மாநிலம் பிலாய் நகரில் நடைபெறுகிறது. 20 ம் தேதி பிற்பகல் சரியாக 0300 மணிக்கு கோரிக்கை பேரணி நடைபெறவிருக்கிறது. அதனை தொடர்ந்து பொது அரங்க நிகழ்சிகளும் நடைபெறும். பேரணியில் பங்குபெற முன்னதாகவே மாநாட்டு அரங்கிற்கு வருகை தர அன்புடன் வேண்டுகிறோம். மேலும் அதில் பங்குபெற தங்களது கோட்ட பேனர் களை எடுத்து வர வேண்டுகிறோம்.

         மேலும் மாநாடிற்க்கான அதற்கான நன்கொடை ரசீதிகள் ஏற்கனவே உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தங்கள் அனைவரும் முடிந்த அளவு அதிகமாக நன்கொடைகளை வசூலித்து மாநாட்டு அமைப்பளர்களுக்கு உதவிட அன்புடன் வேண்டுகிறோம்.  
          வசூலித்த நன்கொடை பணத்தை அந்தந்த மாநில பொறுப்பாளர்கள் பெற்று தருமாறு சட்டிஸ்கர் மாநில செயலாளர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.      எனவே நமது மாநில பொறுப்பாளர்கள் திரு P. திருஞான சம்பந்தம் மற்றும் திரு.J.குணசேகரன் ஆகியோரிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டுகிறோம். மாநாடு அரங்கத்தில் அவர்களிடம் ஒப்படைக்க கிளை/கோட்ட செயலர்கள் தயாராக வரும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
            மேலும் 2013-2014 மற்றும் 2014-2014 க்கான மாநில மற்றும் மத்திய சங்கத்திற்கு அனுப்ப வேண்டிய பகுதி பணத்தையும் கொண்டு வரும்படி வேண்டுகிறோம். ஏற்கனவே தாங்கள் அனுப்பியிருந்தால் அதன் முழு விவரங்களையும் உடன்  தெரிவிக்க  வேண்டுகிறோம். 
               மாநில மற்றும் அகில இந்திய சங்கத்தின் பகுதி பணம் சம்பந்தமாக எந்த சமரசத்துக்கும் இடமில்லை என நமது அகில இந்திய செயலாளர்
திரு. கிஷன்ராவ் அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்கள்.     
            எனவே தமிழக கிளை மற்றும் கோட்ட செயலாளர்கள் கடைசி நேர தர்மசங்கடத்தை தவிர்க்க வேண்டுகிறோம். 

நன்றி 

வாழ்த்துக்களுடன் 
P. திருஞான சம்பந்தம் 
Convenor
NAPE P3, T N  Circle
@Tuticorin 628001
Cell : 967733579
E-mail : Sampantham2014@gmail.com

No comments:

Post a Comment