வருகிற மே மாதம் 6 ம் தேதி முதல் அகில இந்திய அளவில் நடைபெற உள்ள தேசம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு நமது FNPO சம்மேளன அறைகூவலுக்கு இணங்க FNPO மற்றும் NFPE சங்கங்கள் இணைந்த கூட்டு நடவடிக்கை குழு ஏற்படுத்தபட்டு ஆயத்த பணிகள் முழுவிச்சில் நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.
இதற்கிடையில் தமிழகத்தில் மட்டும் சில பிரச்சனைகளை முன்னிட்டு வருகிற 26 ம் தேதி தமிழகத்தில் மாற்று சங்கம் அழைப்பு விடுத்துள்ள போராட்டத்தில் நாம் பங்குபெறவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
எப்போதும் போல பெரியண்ணன் தோரணையில் நம்மிடையே கலந்து ஆலோசிக்காமல் மாற்று சங்கம் மட்டும் தனியாக அறைகூவல் விடுத்துள்ள போராட்டத்திற்கும் நமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
அதில் தேசிய சங்கம் கலந்துகொள்ளவில்லை.
எனவே அன்று எப்போதும் போல பணியாற்றிட வேண்டுகிறோம்.
P. திருஞான சம்பந்தம்
தலைவர் இடைகால குழு
No comments:
Post a Comment