Saturday, 7 March 2015

கோட்ட மற்றும் கிளை செயலர்களின் கவனத்திற்கு

          இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் (வட்டங்களிலும்தொடர்ந்து வெளியிடபட்டு வந்த PA - SA  தேர்வு முடிவுகள் 2014 நமது மாநிலத்தில் மட்டும் நீண்ட  காலமாக  தடைபட்டு தாமதமாகியும் வந்தது. நமது ஆள் பற்றாக்குறையை கலைத்திட பல முறை கோரியும் வலியுறுத்தி வந்ததும்  நினைவிருக்கலாம்.
  
     அதனை தொடர்ந்து நமது CPMG ஆக  கூடுதல் பொறுப்பு ஏற்ற கர்நாடகா CPMG திரு ராமானுஜம் அவர்களை நமது தேசிய அஞ்சல் ஊழியர் சங்க அகில இந்திய துணை பொது செயலாளர்களில் ஒருவரான திருவண்ணாமலை திரு சரவணன் அவர்கள்
நமது தேசிய அஞ்சல் ஊழியர் சங்க கர்நாடக மாநில செயலாளரும் அகில இந்திய துணை பொது செயலாளர்களில் ஒருவருமான திரு சிவகுமார் அவர்களை தொடர்ப்பு கொண்டு வலியுறுத்தியத்தின் பயனாக   திரு சிவகுமார் அவர்கள் கர்நாடகா CPMG திரு ராமானுஜம் அவர்களை பலமுறை தொடர்ந்து வலியுறுத்தி நீண்ட   காலமாக  தடைபட்டு தாமதமாகியும் வந்த PA SA  தேர்வு முடிவுகள் 2014  சமீபத்தில் வெளியிடப்பட்டன. 
       அதனை தொடர்ந்து தற்போது உரிய மதிப்பெண் சான்றிதழ் சரிபார்பிற்கு பிறகு உடனடியாக பணியமர்த்தபட்டு வருகிறார்கள் என்பதை யாவரும் அறிந்ததே. அவர்களிடம் அனைவரும் உரிய உறுப்பினர் படிவங்களை பெற்று நமது சங்கத்தில் உறுப்பினர் ஆக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம். முடிந்த அளவு அதிகமான உறுப்பினர்களை சேர்த்து வலுசேர்க்கும்படி வேண்டுகிறோம். 

No comments:

Post a Comment