Sunday 13 November 2016

8 மணி நேர வேலையா ? இல்லை 8 மணி வரை வேலையா ?

               சமீபத்திய நமது இந்திய அரசு  500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லத்தக்கவை அல்ல என்று அறிவித்த பிறகு அரசின் திட்டங்களும் வெற்றி பெற வேண்டும் மக்களும் பயன்பெற  வேண்டும் என்ற எண்ணத்தில் நாமும் எவ்வித மறுப்பும் சொல்லாமல் தினமும் வேலை நேரம் போக இரவு 9 -10 மணி வரை வேலை பார்த்து வந்தோம். உடனடியாக ஞாயிறும்  வேலை தினம் என்றவுடன்  பயணப்படி ஏதும் உண்டா?  OTA  உண்டா?  C-Off உண்டா?  என கூட கேட்காமல் மனமுவந்து வேலைக்கு வந்த அஞ்சல் ஊழியர்களை பாராட்டத்தான் வேண்டும். 

                 இந்நிலையில் இன்று அதுவும்  இரவு 8 மணி வரை வேலை பார்க்க வேண்டும் eMail மட்டும் Forward  செய்யும் இந்த கோட்ட அதிகாரிகளுக்கு நாம் படும் வேதனைகள் புரிகிறதா ?
               
               இரவு 8 மணி வரை வேலை பார்க்க வேண்டும் பணத்தை என சொல்லும் அதிகாரிகள் - தகுந்த முன் ஏற்பாடு செய்யாமல்  முறையாக பணம் பெறப்பட்டுள்ளதா எல்லா அலுவலகங்களுக்கும் பணம் அனுப்ப பட்டுள்ளது என ஆய்வு செய்யாமல் eMail மட்டும் Forward  செய்து விட்டு நாங்கள் என்ன செய்ய ?  RO,CO & Directorate என கை நீட்டுவது சரியா ?
  
              ஒவ்வொரு அலுவலகங்களுக்கும் 50,000 அல்லது ஒரு லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு (சில இடங்களில் பணமே இல்லாமல்) அதுவும் அவர்கள் கொடுக்கும் பணம் ஒரு மணி நேரத்தில் விநியோகித்த பிறகு அலுவலகத்தில் வாசலையும்  கூரையை மட்டும் வெறித்து பார்த்து கொண்டு இரவு 8 மணி வரை வேலை பார்க்க வேண்டும் என்பது என்ன நியாயம் ?  

               எவ்வித பணமும் இல்லாமல் அலுவலகங்களுக்கு வரும் மக்களிடம் அவர்கள் பேசும் வசவு சொற்களை சிரித்த முகத்துடன் கேட்டு விட்டு நாம் மனதில் படும் வேதனைகள் புரிகிறதா இந்த கோட்ட அதிகாரிகளுக்கு ? 
இரவு 8 மணி வரை நமது அலுவலக மின்சார செலவுக்கு கூட வருமானமின்றி உட்கார்ந்து இருப்பதில் என்ன பயன் ?   
 
              மக்களின் வசவு சொற்கள் நமது இலாகாவின் பெயருக்குத்தான் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்து செயல்படும் அதிகாரிகள் மாறுவர்களா ?


               அரசு திட்டங்களை திட்டும் போது அது முறையாக அஞ்சல் துறைமூலம் சென்றடைகிறது
என்பதையும் அதிகாரிகள் முறையாக அமுல் படுத்துகிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.  இல்லையேல் எவ்வித திட்டங்களை தீட்டியும் என்ன பயன் ? உணருமா அரசு? 
P. திருஞான சம்பந்தம் 
மாநில தலைவர் 
இடைக்கால குழு 


1 comment: