Tuesday, 24 November 2015

கோட்ட செயலாளர்களின் கூட்டம்

           22.11.2015 அன்று தமிழ் மாநில கோட்ட செயலாளர்களின் கூட்டம் திருச்சி தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற்றது. 

கூட்டத்திற்கு மாநில கன்வீனர் திரு திருஞான சம்பந்தம் அவர்கள் தலைமை தாங்கினார். அகில இந்திய துணை செயலாளர் திரு சரவணன், அகில இந்திய மகளிர் கமிட்டி தலைவர் திருமதி விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
             கூட்டத்தில் தமிழ் மாநிலத்தில் இருந்து சுமார் 25 க்கு மேற்பட்ட கோட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். 
மாநில சங்க செயல்பாடுகளில்  ஏற்பட்ட சுணக்க நிலையை முடிவுக்கு கொண்டுவர செய்யவேண்டிய பணிகளை பட்டியலிட்டனர். மாநில சங்கத்துக்கு எதிரான நீதிமன்ற வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர முயற்சிசெய்ய வேண்டினர். 

              முன்னதாக நடைபெற்ற திருச்சி கோட்ட மாநாட்டில் 
தலைவராக திரு வரத நாகராஜன் அவர்களும் 
செயலாளராக திரு பாஸ்கரன் அவர்களும்
பொருளாளராக திரு குணசீலன் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டனர்.
            அவர்களுக்கு மாநில சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
            விரைவில் சுற்றறிக்கை அனைவருக்கும் அனுப்பிவைக்கபடும்.

                            -  திருஞானசம்பந்தம்   தலைவர்   தமிழ்மாநில இடைக்கால குழு.

No comments:

Post a Comment