Wednesday, 18 October 2017

தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்!!!

தனது கொடுஞ்செயல்களால் மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய கொடிய அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மறம் வீழ்ந்து, அறம் வென்ற நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகிடும் நன்னாளாகவும் தீபாவளி திருநாள் விளங்குகிறது.இந்த தித்திக்கும் தீபாவளித் திருநாளில், ஊழியர்கள் அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும் பெருகட்டும், இருள் அகன்று மகிழ்ச்சி ஒளிச்சுடர் பரவட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பாக உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment