Thursday, 30 November 2017

அரக்கோணம் கோட்ட மாநாடு!!

அரக்காணம் கோட்ட தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் மூன்றாம் பிரிவின் இரண்டாவது கோட்ட மாநாடு 26.11.17  அன்று அரக்கோணம் தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அஞ்சல் மூன்றாம் பிரிவின் மாநில செயலர் திரு. N.J. உதயகுமாரன் அவர்கள், சம்மேளன பொதுச்செயலர் திரு. D.தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் இறுதியாக திரு.ஶ்ரீனிவாச சம்பத் அவர்கள்  கோட்ட தலைவராகவும், திரு A.மணி அவர்கள் கோட்ட செயலராகவும், திரு. சுதா அவர்கள் பொருளாளராகவும் மேலும் 12 இதர கோட்ட சங்க நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மாநாட்டிற்கு வட சென்னை கோட்ட செயலர் திரு. பிரதீப் அவர்கள்,  வட சென்னை கோட்ட தலைவர் திரு.சாமிநாதன் அவர்கள், தென் சென்னை கோட்ட செயலர் திரு.சுல்தான் அவர்கள், சென்னை GPO செயலர் திரு.மணிவேலன் அவர்கள், அம்பத்தூர் கிளை செயலர் திரு.ராஜகோபாலன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.அரக்கோணம் கோட்டம் மிக விரைவில், சென்னை மண்டலத்தில் உள்ள ஒரு முக்கியமான கோட்டமாக வளர்ச்சியடையும் என்பதற்கு மாநாட்டு நிகழ்வுகளே சான்றாக அமைந்தது.கோட்ட மாநாட்டை வெகு சிறப்பாக நடத்திய திரு. மணி மற்றும் திரு.ஶ்ரீனிவாச சம்பத் அவர்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.






N.J.உதயகுமாரன்
மாநில செயலர்

No comments:

Post a Comment